நண்பன் திரைப்படம் தனக்கு திருப்புமுனையாக அமைந்ததாக நடிகர் விஜய் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் நண்பன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு புதன்கிழமை வந்து நடிகர் விஐய் ரசிகர்களை சந்தித்தார். பின்னர் மாலையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட விஜய், ஆதாரவற்ற முதியோர்களுக்கு உடை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப் டாப் ஆகியவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், பல படங்களில் நடித்திருத்தாலும் நண்பன் படத்தில் உள்ள கதை, நடிப்பு மற்றும் வசனம் ஆகியவை தனக்கு திருப்புமுனையாக அமைந்தது.
ரசிகர்கள் தான் படத்தின் முழு வெற்றிக்குக் காரணம், அவர்கள் இல்லையென்றால் தனக்கு இந்தப் புகழும், பெருமையும் கிடைத்திருக்காது என்றார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருவதாக விஜய் தெரிவித்தார்.

0 comments: