பில்லா 2, துப்பாக்கி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வித்யூத் ஜாம்வால்.ஒரே சமயத்தில் தமிழ் திரையுலகின் இரண்டு பெரும் நாயகர்களுடன் நடித்து வருவதால் நடிகர் வித்யூத் சந்தோஷத்தில் இருக்கிறார்.
இது குறித்து வித்யூத் கூறுகையில், ஒரே சமயத்தில் விஜய் மற்றும் அஜீத் இருவருடனும் நடித்து வருவது சந்தோஷமாக இருக்கிறது.
பில்லா 2 திரைப்படத்திற்காக ஜார்ஜியாவில் சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கினோம். ஆங்கில சினிமாவில் தான் அதுமாதிரியான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடியும்.
இந்திய சினிமாவில் முதன் முறையாக அந்த சண்டைக்காட்சியை படமாக்கியிருக்கிறோம். இந்த சண்டைக்காட்சியில் நான் நடித்ததில் பெருமைப்படுகிறேன்.
அஜீத் மிகவும் எளிமையான மனிதர், பல விஷயங்கள் குறித்தும் தெளிவான பார்வையுடையவர்.
விஜய்யுடன் நடிக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இவ்வளவு ரசிகர்கள் இருந்தும் இன்னும் தன் தொழிலில் மிகச் சிரத்தையுடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
0 comments: