• பிரபு தேவா எனக்கு அண்ணன் மாதிரி: ஹன்சிகா


    பிரபுதேவா என் அண்ணன் மாதிரி, அவரை நான் அன்பாக பிரபு அண்ணா என்று தான் அழைப்பேன் என்று ஹன்சிகா கூறியுள்ளார்.

    காதலுக்காக பிரபுதேவா தன் மனைவியை விவாகரத்துச் செய்தார், பதிலுக்கு நயன்தாரா மதம் மாறினார்.

    இப்படி பரஸ்பர தியாகங்களை செய்து உன்னத காதல் ஜோடி போல உலா வந்த பிரபுதேவா நயன்தாரா உறவு தற்போது முறிந்துள்ளது, இது பலருக்கும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

    இந்நிலையில் பிரபுதேவாவின் எங்கேயும் காதல் திரைப்படத்தில் நடித்த ஹன்சிகா மோத்வானிதான் நயன்தாரா, பிரபு தேவா காதல் முறிவுக்கு காரணம் என தகவல்கள் வெளியாகிவுள்ளன.

    இதற்கு பதிலளித்துள்ள ஹன்சிகா கூறுகையில், பிரபுதேவா என் அண்ணன் மாதிரி, அவரை நான் அன்பாக பிரபு அண்ணா என்று தான் அழைப்பேன்.

    என் மனநிலையையும் புரிந்து கொள்ளுங்கள் அநாவசியமாக புரளியை கிளப்பி விடாதீர்கள். இப்போதைக்கு எனது லட்சியம், நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பது மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment