• மீண்டும் அஜீத்துடன் இணையும் நயன்தாரா


    கொலிவுட்டில் மீண்டும் அஜீத்துடன் நயன்தாரா இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    கொலிவுட்டில் பிரபுதேவாவுடன் நயன்தாரா தன்னுடைய காதலை முறித்துக் கொண்டார் என்ற தகவலைத் தொடர்ந்து இப்போது நயன்தாரா படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.

    நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

    ஆனாலும் நயன்தாரா அதன் பிறகு எந்த தமிழ் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. ஏற்கனவே ஒப்புக் கொண்ட தெலுங்கு படத்தில் சீதை கதாப்பாத்திரத்தை மட்டும் முடித்துக்கொடுத்தார்.

    இப்போது விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை படக்குழுவினர் அணுகியிருக்கிறார்கள்.

    விஷ்ணுவர்தனும் நயன் தாராவுடன் பேசியிருக்கிறோம். ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்று தெரிவித்துள்ளார். பில்லா-2 படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்த போது அவருடைய தோற்றமும் நடிப்பும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.

    எனவே விஷ்ணுவர்தன் அஜீத்தை வைத்து இயக்க உள்ள அடுத்த படத்திலும் நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment