• வசூல் வேட்டையில் கோச்சடையான்




    கோச்சடையான் படத்தின் தெலுங்கு மொழிமாற்ற உரிமையை ரூ.28 கோடிகள் கொடுத்து வாங்க, தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் முன்வந்துள்ளார்.

    திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் படம் உருவாகி வருகிறது.
    ரஜினிகாந்த் படம் என்றாலே, திரையுலகில் விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும். கோச்சடையான் படமும் இதிலிருந்து தப்பவில்லை.
    கோச்சடையான் முழுவதுமே இந்தியாவில் முதன் முறையாக MOTION CAPTURE TECHNOLOGY மூலம் தயாராக இருக்கிறது. படத்தில் நடிப்பவர்களின் கை, இடுப்பு, கால் உள்ளிட்டவைகளின் அசைவுகள் MOTION CAPTURE செய்யப்படும்.
    கோச்சடையான் படத்திற்காக ரஜினியை தவிர மற்ற நடிகர், நடிகைகள் அனைவருக்கும் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இறுதியாக ரஜினியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்நிலையில் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்குவதற்கும் கடும் போட்டி நிலவுகிறது.
    தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் ஒருவர், மொழிமாற்ற உரிமைக்கே 28 கோடிகளை கொடுக்க தயார் என்று தெரிவித்து இருக்கிறார்.
    கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமை வியாபாரம் என்று பார்த்தால் இப்போதே வியாபாரம் 100 கோடியைத் தொடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment