இரண்டாம் உலகம் திரைப்படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நாயகி ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் இயக்குனர் செல்வராகவன், இரண்டாம் உலகம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இரண்டாம் உலகத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.
முதற்கட்ட படப்பிடிப்பு ஆந்திரா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு நடத்துவதற்காக, பிரேசில் நாட்டிற்கு சென்று படப்பிடிப்பு இடங்களை பார்வையிட்டு செல்வராகவன் திரும்பியுள்ளார்.
இரண்டம் உலகம் படத்தினை முடித்த பின்பு தெலுங்கு நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை தொடங்க உள்ளார்.
இப்படத்தில் நாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ஏற்கனவே அல்லு அர்ஜுனை வைத்து இயக்க உள்ளதாக செல்வராகவன் அறிவித்திருந்தார்.
பின்பு சிறிது நாட்களில் அந்த படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ஸ்ருதி ஹாசன் இணைகின்றனர்.

0 comments: