நடிகர் அமீரின் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் அதிரடி படம் 'ஆதி பகவான்'.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதை தொடர்ந்து படத்தின் இறுதி கட்ட தயாரிப்பு பணியில் மும்மரமாக உள்ளனர் படக்குழுவினர்.
'ஆதி பகவான்' படத்தில் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்துள்ளார். இவவருக்கு ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ நீது சந்திரா நடித்திருக்கிறார். இதில் இளம் நடிகர் ஜெயம் ரவி துணிச்சலோடு, சில ஆபத்தான சண்டை காட்சிகளை செய்துள்ளார்.
இதுபற்றி இயக்குனர் அமீர் கூறியதாவது:
”பாங்காக் படப்பிடிப்பின் போது சண்டை காட்சி ஒன்றில் அவர் கப்பலிலுள்ள ஒரு கம்பத்தின் மீது கால்களால் தொங்க வேண்டும். அதற்காக ஒரு டூப் வைத்து எடுக்கலாம் என்று நான் சொன்னதை மறுத்து டூப் ஏதும் வேண்டாம் என்று சொல்லி அனைத்து காட்சிகளையும் அவரே செய்து முடித்துவிட்டார். அவருடைய இந்த துணிச்சல் படப்பிடிப்பில் உள்ள அனைவரையும் பிரமிக்க வைத்தது. மேலும், அந்த காட்சி படத்தின் உச்சகட்ட காட்சியாகவும், படத்திற்கு பக்க பலமாகவும் இருக்கும்” என்று கூறினார்.
0 comments: