• சந்தானம் வேணும் !: கார்த்தி



    தமிழ் திரையுலகில் கால்ஷீட் டைரி நிரம்பி வழிவது யாருக்கு என்றால் அனைவரும் கூறும் ஒரே பெயர் சந்தானம்.


    விநியோகஸ்தர்கள் மத்தியில் சந்தானம் நடித்து ஒரு படம் வெளிவருகின்றது என்றால் அதற்கு அதிக விலை நிர்ணயம் செய்கிற அளவிற்கு இவருடைய மார்கெட் உச்சத்தில் இருக்கிறது.

    இந்தியில் அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த முழு நீள காமெடி படம் 'டெல்லி பெல்லி'. ஆர்யா, சந்தானம் நடிக்க இப்படத்தினை இயக்க இருக்கிறாராம் கண்ணன். இப்படத்தில் குனால் ராய் கபூர் வேடத்தில் நடிக்க இருக்கிறாராம் சந்தானம். 'டெல்லில் பெல்லி' படத்தில் முக்கிய பாத்திரங்கள் மூவரில் குனால் ராய் கபூர் பாத்திரத்திற்கு நகைச்சுவைக் காட்சிகள் அதிகமாக இருக்கும். ஆகையால் அவ்வேடத்தில் சந்தானம் தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவு எடுத்து இருக்கிறார்களாம்.

    'சிறுத்தை' படத்தில் கார்த்தி சந்தானம் இருவரின் காமெடி கலாட்டாக்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இனிமேல் சந்தானம் தான் எனது படங்களில் காமெடி என்று முடிவெடுத்து இருக்கிறாராம் கார்த்தி.

    கார்த்தி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் சகுனி, சுராஜ் இயக்கத்தில் அனுஷ்காவோடு நடித்து வரும் படம், ராஜேஷ் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் என அனைத்திலும் சந்தானம் தான் கார்த்தியோடு கூட்டணி அமைக்க இருக்கிறார்.

0 comments:

Post a Comment