• பிரபுதேவா பெயரை அழிக்க நயன்தாராவுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி



    சிம்பு, நாகார்ஜுனா என தனது காதல் அத்தியாயங்களில் எவ்வித கீரலும் இல்லாமல் விழுந்து எழுந்த நயன்தாரா, சற்று அல்ல சற்று பலமாகவே விழுந்துவிட்டார் பிரபுதேவா அத்தியாயத்தில்.

    பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்ட பிறகு, கையில் பிரபு தேவாவின் பெயரை பச்சைக் குத்திக் கொண்டது, பிரபு தேவாவை அவரது காதல் மனைவியிடம் இருந்த விவாகரத்து செய்ய வைத்து பிரித்தது, சினிமாவில் இருந்து விலகியது, இந்துவாக மாறியது என பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் திருமணம் மட்டும் நடக்காமல் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. வெறுப்படைந்த நயனம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு காதல் அத்தியாத்தை முடித்து விட்டார்.
    மீண்டும் கோலிவுட் திரும்ப நினைத்த போதுதான், ஒரு நினைவு... எப்போதும் தன்னுடன் வந்து கொண்டிருப்பதை உணர்ந்தார் நயன். ஆம், கைகளில் பிரபுதேவா பெயரை பச்சைக் குத்தியதுதான் அது.
    பச்சைக் குத்தியதை விட, அதை தற்போது பார்க்கும்போதுதான் அதிகமான வலி ஏற்படுகிறது போலும். அதனால் உடனடியாக பல லட்சம் பணம் செலவழித்து பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் அதனை மறைக்க வெளிநாடு பறக்க உள்ளார் நயன்தாரா.

0 comments:

Post a Comment