• கார்த்திக்கு வில்லியாக ராதிகா



    தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பு, தயாரிப்பு என பிசியாக இருக்கும் ராதிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரிய திரையில் தலைகாட்ட வருகிறார் வில்லியாக. ஆம். சகுனி படத்தில் கார்த்திக்கு வில்லியாக நடிப்பது நம் சித்தி ராதிகாவேதான்.

    என்ன இந்த திடீர் பிரவேசம் என்று கேட்டதற்கு, சிரித்தபடியே, முதலில் கார்த்தியும், இயக்குநர் சங்கர் தயாள் சர்மாவும் கேட்டபோது, நேரமின்மையால் ஒத்துக் கொள்ள மறுத்துவிட்டேன். பிறகு மேலிடத்தில் இருந்து அதாவது சிவக்குமாரிடம் இருந்து போன் வந்தது. அடடா இவரே சொல்கிறார் என்றால் நிச்சயம் நல்ல கதாபாத்திரமாக இருக்குமே என்று கதை கேட்டேன். கதையில் நான் வில்லியாக இருந்தாலும், கதையின் நாயகியே நான்தான் என்று கதைக் கேட்டதும் ஒப்புக் கொண்டேன்.
    அப்படி என்ன கதை என்று கேட்டதற்கு சிறிய முறைப்புடன் புன்னகைத்துவிட்டு, கதையெல்லாம் சொல்ல மாட்டேன், கதையில் நான் ஒரு மீன்காரியாக வந்து வளர்ந்து அரசியலில் குதித்து ஆட்டம் போடுவதே என் கதாபாத்திரம். எனக்கு பி.ஏ.வாக மும்தாஜும் நடிக்கிறார் என்றார் ராதிகா.
    அப்புறம் என்ன கேட்கவா வேண்டும் ரசிர்களுக்கு. கண்டிப்பாக ஒரு குத்தாட்டம் இருக்கும் என்று நம்பலாம்.
    சித்தியை விரைவில் பெரிய திரையில் பார்ப்போம் சகுனியாக...

0 comments:

Post a Comment