த்ரிஷாவுடன் இணைந்து தற்போது நடித்து வரும் விஷால், அடுத்து நடிக்கும் படத்தில் சுருதி கமலஹாசனுடன் இணை சேர உள்ளார். இப்படத்தை இயக்கப்போவது சுந்தர்.சி.
இயக்கத்தில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த சுந்தர் சி. திடீரென இயக்கத்தை மூட்டை கட்டிவிட்டு, நடிப்பிற்கு வந்தார். அவர் நடித்த படங்களும் செம ஹிட்டாக, சிறந்த நடிகராகவும் மக்கள் மத்தியில் வலம் வந்தார். இந்த நிலையில் மீண்டும் இயக்கத்திற்கே சென்றுள்ளார்.
தற்போது இயக்கி வரும் மசாலா காபி படத்தில் விமல், சிவா, அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இதனை முடித்தவுடன் விஷால் மற்றும் சுருதியை வைத்து அடுத்த படம் இயக்க உள்ளார். இப்படத்தில் விஷால் 3 ரோல்களில் நடிக்கிறார். இப்படத்திற்கு இரண்டு கதாநாயகிகள் என்பது கூடுதல் தகவல்.

0 comments: