• தெலுங்கு படத்தில் நடிக்கிறார் பார்த்திபன்



    பார்த்திபன் தனது முதல் தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பெயர் ஆப்பு. பார்த்திபன் நடிப்பதால் இந்த பெயர் வைத்தார்களா அல்லது இந்த படத்தின் தலைப்பு பிடித்ததால் பார்த்திபன் ஒப்புக் கொண்டாரா என்று தெரியவில்லை நமக்கு.

    சரி விஷயத்திற்கு வருவோம்...
    தெலுங்கு இயக்குநர் சம்பத் நந்தியின் இயக்கத்தில், சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா கதாநாயாகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். ராம்சரணுக்கு அப்பா கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்க உள்ளார்.
    தெலுங்கு படத்தில் நடிப்பதும், சிறு வேடத்தில் ஹீரோவுக்கு அப்பாவாக பார்த்திபன் நடிப்பதும் இதுதான் முதல் முறையாகும். இந்த திடீர் முடிவிற்கு என்ன காரணம் என்று நம்மால் கேட்காமல் இருக்க முடியுமா என்ன? கேட்டு விட்டோம்..
    "கதாபாத்திரம் சிறியதாக இருந்தாலும், கதையில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே ஒப்புக் கொண்டேன்" என்கிறார் பார்த்திபன்.
    அவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்..

0 comments:

Post a Comment