• சினிமாவில் இது ரீமேக்குகளின் காலம்


    தமிழ் சினிமாவிற்கு இது ரீமேக் காலம் போல, காவலன், சிங்கம் என தமிழில் எந்தப் படம் ஹிட் ஆனாலும், ஆகாவிட்டாலும் அது ஹிந்திக்கு ரீமேக் ஆகிவிடுகிறது.

    அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் காதலில் சொதப்புவது எப்படி படம் விரைவில் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது.
    தமிழ், தெலுங்கு இரண்டிலுமே காதலில் சொதப்புவது எப்படி படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். எனவே, நிச்சயம் இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வேன் என்றார் அதன் இயக்குநர் பாலாஜி மோகன்.
    படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, படத்தியன் நாயகன் சித்தார்த், நிச்சயம் இப்படத்தை ஹிந்தியிலும் எடுக்க வேண்டும் என்று சொன்னதாக பாலாஜி மோகன் நினைவு கூருகிறார்.

0 comments:

Post a Comment