நடிகர் ஜீவாவை வைத்து “ரௌத்திரம்” படத்தை இயக்கிய டைரக்டர் கோகுல், அடுத்த படத்தை இயக்க தயாராக உள்ளார். இந்த படத்தினை இரண்டு நடிகர்களை வைத்து ஒரு முழு நீல காமெடி படமாக எடுக்கவுள்ளார்.
இப்படத்தில் ஒரு கதாநாயகனாக 'ஜெய்' தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார். மற்றொரு நடிகரை தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
இதுபற்றி இயக்குனர் கோகுல் கூறியதாவது, ”இந்த படம் முழுமையான காமெடி படம் என்பதால் இதற்கு பொருத்தமான ஒரு நடிகரை தேடிக்கொண்டிருக்கிறேன். மேலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஜெய் நடித்த 'கோவா' மற்றும் 'சென்னை-28' படத்தில் ஜெய் தனது நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருந்தார் என்வே ஜெய்யை இப்படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று தேர்ந்தெடுத்தேன். இப்பட்த்திற்கு பெயர் இன்னும் சூட்டவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: