• அபி – ஐஸ் குழந்தை ’பேட்டி பி’ யின் பெயர் அறிவிப்பு



    சமீபத்தில் நாடு முழுவதும் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் பிறந்த குழந்தை நடிகை ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சனின் குழந்தை. பாலிவுட்டில் இக்குழந்தை பிறந்தவுடனேயே பல கோடிகளை சம்பாதித்தது.


    அமிதாப் பச்சான், பச்சான்ஸ் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இக்குழந்தையை “பேட்டி-பி” என்று செல்லமாக அழைத்து வந்தனர். மேலும், அபிஷேக் பச்சான் தன் ரசிகர்களிடம், குழந்தைக்கு நல்ல பெயர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    குழந்தை பிறந்து மூன்று மாதம் முடிவடைந்த நிலையில், குழந்தையின் பெயரை அறிவிக்காமலே இருந்தனர். தற்போது இக்குழந்தைக்கு “அபிலாஷா” என்று பெயரிட பச்சான்ஸ் குடும்பத்தினர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ’ஆலியா’ என்ற பெயரும் பரிசீலைனையில் இருந்தது. ஆனால் பச்சான்ஸ் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பெரும்பானமையான ஆதரவு ”அபிலாஷா” என்ற பெயருக்கே கிடைத்திருப்பதால் இப்பெயரை முடிவு செய்திருக்கிறார் பெற்றோர்கள்.

    அமிதாப் பச்சான் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சமீபத்தில் சேர்ந்து, சிகிச்சை பெற்று வரும் இவர் விரைவில் வீடு திரும்பயுள்ளார். இதன் பிறகு குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவின் தேதியை முடிவு செய்வார்கள் என தெரிகிறது.

0 comments:

Post a Comment