ஒரு முடிவோடுதான் இருக்கிறார் போலிருக்கிறார் கருணாஸ். காமெடிக்கே பஞ்சம் என்கிற போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம்.
கருணாஸின் முதல் ஹீரோ அவதாரமான திண்டுக்கல் சாரதி சன் பிக்சர்ஸின் விளம்பர வெள்ளத்தில் ஓரளவு நீச்சலடித்தது. இரண்டாவது படமான அம்பானி அய்யோ பாவமாக்கியது தயாரிப்பாளரை. இருந்தும் கருணாஸின் கதாநாயகன் ஆசை விடவில்லை.
சந்தமாமா என்ற படத்தில் விரைவில் ஹீரோவாகிறார் கருணாஸ். இதுதவிர ரகளைபுரம் என்ற படத்தில் மனோகர் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ம்… எல்லாம் வடிவேலு இல்லாத குறை.
0 comments: