படத்தில் நடிப்பதற்கு நாற்பது லட்சம் அட்வான்ஸ் வாங்கி, படத்தில் நடிக்கவும் செய்யாமல், பணத்தையும் திருப்பித் தராமல் தயாரிப்பாளரை மொட்டையடித்த இலியானாக்கள் உலவும் இந்தர தேசத்தில் இப்படியும் ஒரு நடிகை. கேட்கையில் புல்லரிக்கதான் செய்யுது.
கருவாச்சி என்ற படத்தில் பூர்ணா நடித்து வருகிறார் இல்லையா? இந்தப் படத்தைதான் கடைசி வைக்கோல் துரும்பாக அவர் எண்ணிக் கொண்டிருக்கிறார். படத்தைப் பற்றி அவர் தரும் பில்டப்புகளைப் பார்த்தால் கருவாச்சி பாரதிராஜாவின் கருத்தம்மாவை பீட் பண்ணுமோ என்று தோன்றுகிறது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பணமுடை. மேற்கொண்டு படத்தை நகர்த்த டப்பு தேவை. இதையறிந்ததும் படத்துக்காக தான் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்திருக்கிறார். அட்வான்ஸை வச்சு நாம என்ன பண்ணப் போறோம். தயாரிப்பாளரிடம் அது இருந்தால் படப்பிடிப்பாவது நடக்கும் என்று நெகிழ்கிறார் பூர்ணா.
பூர்ணாவின் இந்த நிலை வரும் போது இலியானாக்கள் தானாக திருந்திவிடுவார்கள்
0 comments: