• சந்தோஷத்தில் காஜல் அகர்வால்



    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்த காஜல் அகர்வால், தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகர்களுடன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
    தென்னிந்திய திரைப்பட நாயகர்களின் படங்களின் நாயகியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.


    தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த 'பிஸினஸ்மேன்' படத்தில் நாயகியாக நடித்தார். அப்படம் வரவேற்பை பெற்றது.

    தமிழில் விஜய்யுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' என இரு முன்னணி நாயகர்களின் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார். இவ்விரண்டு படங்களுக்குமே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

    பாலிவுட் திரையுலகில் தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கானின் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். அப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் ஆனது.

    தற்போது காஜல் அகர்வால், பாலிவுட்டில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான நிரஜ் பாண்டே( 'A WEDNESDAY' இயக்குனர்) இயக்க இருக்கும் 'SPECIAL CHABBIS' என்னும் படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

    தமிழ், தெலுங்கு திரையுலகினை தொடர்ந்து இந்தியிலும் முன்னணி நாயகர்களின் படங்களின் வாய்ப்புகள் வருவதால் காஜல் அகர்வால் சந்தோஷத்தில் சிக்கி தவிக்கிறார்.

0 comments:

Post a Comment