பிரபல இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் ”இரண்டாம் உலகம்” மிகப் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் ’வேட்டை’ நாயகன் ஆர்யா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அழகுபுயல் அனுஷ்கா நடிக்கிறார். ஹாரீஸ் படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் முதன் முறையாக டைரக்டர் செல்வராகவனும், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜீம் இணைந்து பணியாற்றயுள்ளார்கள்.
படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அனுஷ்கா, இரட்டை வேடங்களில் நடித்து அசத்தயுள்ளார். இதில் குடும்பத் தலைவி மற்றும் பழங்குடியினப் பெண் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தெரிகிறது.
பழங்குடியினப் பெண் என்றாலே அந்த காலத்தில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்குவார்கள். அந்த வகையில் அனுஷ்கா நடிக்கும் பழங்குடியினப் பெண் கதாபாத்திரத்திற்காக தற்காப்பு கலையை கற்று வருகிறார். இவர் நிறைய ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதாலும் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடிப்பதாலும் மிக்க சந்தோஷத்தில் இருக்கிறார்.
0 comments: