ஓஸ்கர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஓர் புதிய திரைப்படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கவுள்ளார்.
பில்லா 2 திரைப்படத்தில் தற்போது மிகவும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகர் அஜீத்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஓஸ்கர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஓர் புதிய திரைப்படத்தில் அஜீத் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்று பெயரிட்டுள்ளனர்.
தெலுங்கு ஸ்டார் ரவிதேஜா, உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர் இத்திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடிக்கவுள்ளனர்.
தலைவன் இருக்கிறான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments: