வருகிற மார்ச் 11ம் திகதி நடிகை ரீமா சென்னுக்கும், டெல்லி ஓட்டல் அதிபர் ஷிவ் கரண் சிங்குக்கும் திருமணம் நடக்கிறது.
கொலிவுட்டில் மின்னலே, தூள், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் ரீமா சென் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களுடன் நடித்த பெருமை ரீமாசென்னுக்கும் உண்டு.
சமீபத்தில் ராஜபாட்டை திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
இந்நிலையில் நாயகி ரீமாசென்னுக்கு திருமணம் முடிவாகி அதற்கான திகதியும் வெளியிடப்பட்டுள்ளது.
ரீமா சென், ஷிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை எதிர்வரும் மார்ச் 11ம் திகதி தலைநகர் புதுடெல்லி அருகே உள்ள மணமகனின் பண்ணை வீட்டில் திருமணம் செய்ய உள்ளார்.
இத்திருமணத்தில் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என்று ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.
திருமணத்திற்கான உடைகள் மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான புதிய ரகங்களில் நகைகள் வாங்கப்பட்டுள்ளன.
தமிழ் நடிகர் நடிகைகளுக்கும் இந்த திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார் ரீமா சென். இதற்காக விரைவில் சென்னையில் முகாமிட உள்ளார்.
0 comments: