பிரபு தேவாவுடன் காதல் முறிந்துள்ளதால் மீண்டும் நடிக்க ஆரம்பத்திருக்கும் நயன்தாராவுக்கு ரூ1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா.
பிரபுதேவாவை திருமணம் செய்யவிருந்ததால் தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய பங்கு சந்தை நிலவரத்தில் எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார்.
இந்நிலையில் பிரபுதேவா-நயன்தாரா காதலில் முறிவு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் நயன்தாரா மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது தெலுங்கில் நாகர்ஜூனாவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் அவருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ.1.5 கோடி.
நயன்தாராவின் இந்த சம்பள உயர்வைக் கேட்டு முன்னணி நடிகைகள் பலர் திகைத்துள்ளார்கள்.
நடிப்பிற்கு முழுக்கு போட்டு சென்ற நடிகையை திருப்பி அழைத்து வந்து இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்களே என்று பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளம் என்றால், இனி அவர் நடிக்கவிருக்கும் திரைப்படங்களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்குவாரோ என்று சினிமா வட்டாரங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன.
0 comments: