கொலிவுட்டில் இதுவரை சிம்பு நடித்த படங்களை விட அதிக பொருட்செலவில் போடா போடி உருவாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் ஒஸ்தி திரைப்படத்திற்கு பிறகு சிம்பு வேட்டை மன்னன், வடசென்னை, போடா போடி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
போடா போடியில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி நாயகியாக நடிக்க, விக்னேஷ் இயக்கி வருகிறார்.
போடா போடி படப்பிடிப்பு முழுவதையும் படக்குழுவினர் லண்டனில் நடத்தி இருக்கிறார்கள். மேலும் கதைக்கு தேவைப்பட்டதால் பிறந்த குழந்தை மற்றும் ஆறுமாத குழந்தையை நடிக்க வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் சிம்புவின் நடிப்பு வித்தியாசமாக இருக்கும் என்றும் இதுவரை ரசிகர்கள் திரையில் பார்க்காத சிம்புவை போடா போடியில் பார்ப்பார்கள் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் கொலிவுட்டில் இதுவரை சிம்பு நடித்த படங்களை விட அதிக பொருட்செலவில் போடா போடி உருவாகி வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
போடா போடி திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் 3 மாதங்கள் நடத்தப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவாளராக DUNCAN TELFORD என்கிற வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் பணியாற்றி வருகிறார்.

0 comments: