பிரபல நடன இயக்குனரான பரா கான், ஷாருக் கான் நடித்த மை ஹு நா, ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட படங்களில் இயக்குநராக பணியாற்றினார்.
இவரது கணவர் ஷிரிஷ் குந்தர் இவரும் இயக்குனர். மும்பை புறநகரிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் “அக்னீபத்” பட வெற்றிக்காக நடிகர் சஞ்சய் தத் பார்ட்டி வைத்திருந்தார்.
இதில் பாலிவுட் ஸ்டார்களும் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்க பாதுகாப்பாளர்களுடன் வந்தார் ஷாருக்கான். அப்போது அங்கிருந்த ஷிரிஷ் குந்தரை பார்த்த போது எதிர்பாராத விதமாக கோபம் அடைந்தார்.
என்னைப் பற்றி டுவிட்டரில் எதர்காக விமர்சனம் செய்ய வேண்டும் என ஷிரிஷ் குந்தரின் பின்பக்கத்திலிருந்து பாய்ந்து ஒரு குத்துவிட்டார் ஷாருக். இதில் நிலைகுலைந்து ஷிரிஷ் சோபாவில் விழுந்தார்.
பிறகு அவரது முகத்திலும் குத்துவிட்டார் ஷாருக். தொடர்ந்து கண்மண் தெரியாமல் ஷிரிஷை ஷாருக் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சஞ்சய் தத், இருவரையும் விலக்கிவிட்டார்.
அதிகாலை 3 மணி அளவில் தொடங்கிய இந்த மோதலால் ஓட்டலில் பதற்றம் நிலவியது. ஷாருக் விட்ட குத்தில் ஷிரிஷ் முகம் வீங்கத் தொடங்கியது. உடனே முகத்தை மூடியபடி அங்கிருந்து வெளியேறினார். ஷாருக்கான் நடித்த ‘ரா ஒன்' படத்தை ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் ஷிரிஷ் கடுமையாக விமர்சித்திருந்தார். சமீபத்தில் பிரியங்கா சோப்ராவுடன் ஷாருக்கை இணைத்து கிண்டல் செய்யதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி ஷரிஷ் இன்று கூறுகையில் எதிர்பாராத நேரத்தில் ஷாருக்கான் என்னை தாக்கினார். அதுவும் கூட பாதுகாப்பாளர்கள் அழைத்து வந்திருந்தார். பின்னால் தாக்கியதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதுவே வேறு இடமாக இருந்து நேருக்கு நேர், தனியாளாக என்னை தாக்கி இருந்தால் அவரை ஒரு கை பார்த்திருப்பேன். இப்போது சவால் விடுகிறேன். அடுத்த முறை என்னை தாக்குவதாக இருந்தால் நேருக்கு நேர் தாக்கட்டும்.
அதற்கு தக்க பதிலடி கொடுப்பேன். அடிக்கடி என் நண்பர் சல்மான் கானையும் சேர்த்து திட்டிக்கொண்டே இருந்தார். சல்மானுடன் ஷாருக்கிற்கு ஏதாவது தகராறு இருந்தால் அதை நேரடியாக அவரிடம் தீர்த்துக்கொள்ள வேண்டியதானே. தைரியமிருந்தால் அவரிடம் மோதட்டும் பார்க்கலாம். இவ்வாறு ஷிரிஷ் ஆவேசமாக கூறினார்.
0 comments: