மோதலில் ஈடுபட்ட நடிகர் ஷாருக்கானும் இயக்குனர் ஷிரிஷ் குந்தரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அக்னிபத் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், அந்த படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் நேற்று முன்தினம் இரவு மும்பையில் பார்ட்டி கொடுத்தார்.
அதில் பிரபல நடன இயக்குனர் பராகானின் கணவரும் இயக்குனருமான ஷிரிஷ் குந்தர் கலந்து கொண்டார். நள்ளிரவில் அங்கு வந்த ஷாருக்கான் திடீரென ஷிரிஷ் குந்தரை தாக்கினார்.
ரா ஒன் படம் குறித்து ஷிரிஷ் குந்தர் டுவிட்டரில் மோசமாக விமர்சனம் செய்ததாகவும், அந்த ஆத்திரத்தில் இருந்து ஷாருக் அவரை தாக்கியதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று பரா கான், ஷிரிஷ் குந்தருடன் ஷாருக் வீட்டுக்குச் சென்று மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு நடிகர் சஞ்சய்தத் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பராகான் கூறும்போது, பலரும் இந்த பிரச்னையை பெரிதுபடுத்தி மேலும் மோசமாக்குவதை விரும்பவில்லை. இந்த சந்திப்பின்போது ஷாருக்கும் ஷிரிஷும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மன்னிப்பு கேட்டக்கொண்டனர். மேலும் ஷாருக் எனது பாசமிக்க நண்பர் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
0 comments: