மார்க்கெட் டாப்பில் இருக்கும் நேரத்தில் சின்னத்திரைக்கு வந்தால் ‘மருவாதி கோவிந்தா’ என்று அஞ்சும் நடிகர்களில் சூர்யா மட்டும் சூப்பர் பவர் மேன்தான் எப்போதும்.
ரிட்டையர் ஆகும் ஸ்டேஜில் அமிதாப் செய்த டி.வி ஷோவை அதற்குள் செய்ய முன் வந்த அவரது துணிச்சலுக்கு சேனல் உலகம் தேங்ஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில்தான் வேறொரு புதிய செய்தியும் காதில் வந்து பாய்ந்திருக்கிறது.
முன்னணி சேனல் ஒன்றில் நடிகர் சூர்யா பங்கு பெறும் அந்த பலே நிகழ்ச்சி பற்றிதான் இந்த நியூஸ். இந்தப் படப்பிடிப்பு இன்னும் கால் கிணறு கூட தாண்டவில்லை. அதற்குள் இவர் வாங்கியிருக்கும் சம்பளம் மட்டுமே பத்து கோடியை தாண்டிவிட்டதாம். இவ்வளவு சம்பளம் கொடுக்கிறோமே என்கிற வருத்தம் சேனலுக்கும் இல்லை. ஏன் தெரியுமா? இந்த பணம் மக்களின் பணம். அதெப்படி?
நிகழ்ச்சியின் நடுவில் சூர்யா மக்களிடம் கேள்வி கேட்பார். அதற்கு எஸ்எம்எஸ் மூலம் பதிலளிக்கலாம். அவர் கேட்ட ஒரு கேள்விக்கு மட்டுமே தமிழகம் முழுவதுமிருந்து சுமார் நாலு கோடி எஸ்எம்எஸ்கள் வந்திருக்கிறதாம். ஒரு எஸ்எம்எஸ் சுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி வாரா வாரம் கேள்வி கேட்பாராம் சூர்யா.
கணக்கை போடுங்க… அவங்கவங்க தலையை அவங்கவங்களே சுத்திக்கோங்க மக்களே
0 comments: