பாடலுக்கான இசையை, இரு தெலுங்கு படங்களில் பயன்படுத்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் கேட்டுள்ளனர்.
கொலிவுட்டில் ஐஸ்வர்யா இயக்கும் “3” திரைப்படத்திற்காக தனுஷ் எழுதி பாடிய “Why This Kolaveri di” பாடல் உலகமெங்கும் பிரபலமாகியுள்ளது.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். மெரினா நாயகன் சிவ கார்த்திகேயன் தனுசுக்கு நண்பனாக நடிக்கிறார்.
3 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் இசையை இரு தெலுங்கு படங்களில் பயன்படுத்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் கேட்டுள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து இந்தி தயாரிப்பாளர்களும் கேட்கிறார்கள். கொலை வெறி பிரபலத்தால் இப்பாடல் இடம் பெற்றுள்ள “3” படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.
கொலைவெறி பாடலுக்காக பிரதமர் மன்மோகன் சிங், நாயகன் தனுஷ், நாயகி ஸ்ருதி ஹாசன் இருவரையும் தன்னுடைய விருந்திற்கு அழைத்த விடயம் குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள “Why This Kolaveri di” பாடலுக்கான இசையை, இரு தெலுங்கு படங்களில் பயன்படுத்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் கேட்டுள்ளனர்.கொலிவுட்டில் ஐஸ்வர்யா இயக்கும் “3” திரைப்படத்திற்காக தனுஷ் எழுதி பாடிய “Why This Kolaveri di” பாடல் உலகமெங்கும் பிரபலமாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். மெரினா நாயகன் சிவ கார்த்திகேயன் தனுசுக்கு நண்பனாக நடிக்கிறார். 3 படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இந்த பாடல் இசையை இரு தெலுங்கு படங்களில் பயன்படுத்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் கேட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இந்தி தயாரிப்பாளர்களும் கேட்கிறார்கள். கொலை வெறி பிரபலத்தால் இப்பாடல் இடம் பெற்றுள்ள “3” படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. கொலைவெறி பாடலுக்காக பிரதமர் மன்மோகன் சிங், நாயகன் தனுஷ், நாயகி ஸ்ருதி ஹாசன் இருவரையும் தன்னுடைய விருந்திற்கு அழைத்த விடயம் குறிப்பிடத்தக்கது.
0 comments: