• குஷ்பு நடித்து தயாரிக்கும் புதிய சீரியல் 'பார்த்த ஞாபகம் இல்லையோ'



    சமீபகாலமாக அரசியலில் பிஸியாக இருந்த நடிகை குஷ்பு, தற்போது மீண்டும் தொலைக்காட்சி பக்கம் திரும்பி இருக்கிறார்.


    'கல்கி' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களை சொந்தமாக தயாரித்து, நடித்து வந்த குஷ்பு, சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொலைக்காட்சி தொடர் ஒன்றை தயாரித்து நடிக்கிறார். 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இத்தொடர், கலைஞர் தொலைக்காட்சியில் மார்ச் 5ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

    திங்கள் முதல் விழாயன் வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடர் அமானுஷ்ய நிகழ்வுகளை உள்ளடக்கிய சமூகத் தொடராகும்.

    கதைப்படி ஒரு பெரிய குடும்பத்தில் மருமகளாக நுழையும் குஷ்புவை, அந்த குடும்பமே கொண்டாடுகிறது. ஆனால், புகுந்த வீட்டை செழிக்க வைக்க வேண்டிய மருமகளாக இல்லாமல், அதற்கு மாறாக அந்த குடும்பத்தை அழிக்க தொடங்குகிறார் குஷ்பு. ஏன் இந்த பழிவாங்கும் செயல்? எதற்காக குஷ்பு அவர்களை அழிக்க நினைக்கிறார்? என்பதே கதை.

    இத்தொடரைப் பற்றி குஷ்பு கூறுகையில், "சினிமா படங்களை பொருத்தவரையில் ஒரு க்ளைமாக்ஸ்தான் இருக்கும். ஆனால், சீரியலில் வாரம் ஒரு க்ளைமாக்ஸ் வைக்க வேண்டும். அப்போதுதான் ரசிகர்களிடம் அத்தொடர் சென்றடையும். பார்த்த ஞாபகம் இல்லையோ சீரியலை பொருத்தவரையில் அதிகமாம எபிசோட்கள் ஓட்டுவதை காட்டிலும், விறுவிறுப்பான தொடராக இருக்க வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தி இருக்கிறோம். மற்ற சீரியலில் உள்ள செண்டிமென்ட் இத்தொடரிலும் இருந்தாலும், மற்ற தொடர்களை காட்டிலும் 'பார்த்த ஞாபகம் இல்லையோ' வேறுபட்டு இருக்கும்." என்றார்.

    குஷ்பு இத்தொடருக்கு கதை எழுதி நடிப்பதுடன், தனது 'அவ்னி டெலிமீடியா' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இதில் குஷ்புவுடன் சீனு, டெல்லி குமார், பானுமதி, ஷோபனா, தனுஷ், விஷேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

    'எங்கேயும் எப்போதும் படத்திற்கு இசையமைத்த சத்யா இத்தொடரின் டைட்டில் பாடலுக்கு இசையமைத்ஹ்டிருக்கிறார். திரைக்கதை என்.பிரியன், பி.மாரிமுத்து. வசனம் டி.வெங்கடேஷ், ஒளிப்பதிவு ஆல்வின், இயக்கம் என்.பிரியன். (டிஎன்எஸ்)

0 comments:

Post a Comment