தமிழீழ விடுதலைப் புலிகளை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய இந்திப் படத்தில் நடிக்கிறார் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்.
இந்தப் படத்துக்கு ஜாஃப்னா (யாழ்ப்பாணம்) என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை அவரே தயாரிக்கிறார்.
பிரபல இயக்குனர் ஷூஜித் ஸிர்கர் இயக்குகிறார். இந்திய புலனாய்வு அதிகாரியாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ஜான் ஆபிரகாம்.
இலங்கையின் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நடந்த மோதல்கள் மற்றும் இந்திய அமைதி காக்கும் படை ஈழப் பகுதிகளில் நிறுத்தப்பட்ட போது புலிகளுடன் ஏற்பட்ட மோதல்கள் குறித்தும் இந்தப் படத்தில் காட்சிகளை வைப்பார்கள் எனத் தெரிகிறது.
அப்படி காட்சிகள் இருக்கும்பட்சத்தில் இந்தப் படம் கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும். காரணம், இந்திய அமைதி காக்கும் படைதான் மிகப் பெரிய பாதிப்பை ஈழத்தில் உண்டாக்கி விட்டதாக புலிகள் குற்றம்சாட்டி, போரிடவும் செய்தனர்.
போர் நடந்த பகுதிகளிலேயே இந்தப் படத்தை எடுக்கப் போவதால், அடிக்கடி யாழ்ப்பாண், வன்னிப்பகுதிகளை பார்த்துவிட்டு வருகிறாராம் ஜான். ராஜபக்சே அரசின் ஆதரவோடும் சலுகைகளோடும் இலங்கையில் எடுக்கப்படும் இலங்கைப் பற்றிய படம் எப்படி இருக்கும்?!
0 comments: