• அதுக்கு நான் சரியா வருவேனா தெரியலியே! - நாகார்ஜூனா



    திருப்பதி: அரசியலுக்கு நான் சரியாக வருவேனா என்று தெரியவில்லை. ஆனா ஆசையாத்தான் இருக்கு, என்றார் நடிகர் நாகார்ஜூனா.


    திருப்பதியில் நகை கடை ஒன்றை திறந்து வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் நாகார்ஜூனா.

    அப்போது, "அரசியலை நானும் உற்று நோக்கி வருகிறேன். அரசியலில் சேர ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் அதற்கு தான் சரியாக வருவேனா என்பது தெரியவில்லை", என்றார்.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதராவாக செயல்பட விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க மறுத்த நாகார்ஜுன் திடீரென அரசில் பற்றி பேசியிருப்பது ஆந்திர திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிரஞ்சீவியை தொடர்ந்து விரைவில் ஆந்திர திரையுலகின் மற்றொரு முன்னனி நடிகரின் அரசியல் பிரவேசத்தை காணும் வாய்ப்பு தெலுங்கு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

    ஏற்கெனவே பாலகிருஷ்ணாவும் அரசியலில் குதித்துள்ளார். தெலுங்கு தேசத்துக்கு ஆதரவாக நடிகர் ஜூனியர் என்டிஆரும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment