• சென்னையிலேயே செட்டில் அமலாவின் திடீர் முடிவு



    ஆட்டைக்கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியில் சித்தார்த்தையும் கடித்து விட்டார் அமலா. கொஞ்ச நாட்களாகவே இருவருக்கும் நடுவில் நெருப்பு பற்றிக் கொண்டு எரிகிறதாம். ஏன், எதற்கு என்று விரிவாக அலசுவதற்காக அமலாவை தொடர்பு கொள்ளும் மீடியாவுக்கு, அப்படியெல்லாம் இல்லைங்க என்று கூலான ஒரு பதிலால் மொத்த பிரச்சனைக்கும் முடிவு சொல்லி விடுகிறார் அவர்.


    சித்தார்த்துக்கு அது பற்றியெல்லாம் பேசவே நேரமில்லை. ஒரே டென்ஷனில் இருக்கிறாராம். இவரே தயாரித்து நடித்திருக்கும் காதலில் சொதப்புவது எப்படி பட ரிசல்ட் குறித்துதான் இந்த டென்ஷன். முதன் முறையாக தயாரித்த படம். நல்லா ஓடணுமே என்ற பதற்றம்தான். அதிருக்கட்டும். மறுபடியும் ஒரு அமலா நியூஸ்.

    தி.நகரில் வீடு வாங்கிவிட்டார் அமலா பால். 'மைனா'வை தவிர இவர் நடித்து ஒரு படமும் ஓடவில்லை என்றாலும், மார்க்கெட்டில் இவருக்கென்று ஒரு பெரிய விலை இருக்கிறது. அதன் காரணமாக இன்னும் ஐந்து வருடங்களுக்காவது நாம்தான் ராணி என்ற மிதப்பும் இருக்கிறது அமலாவுக்கு. கொச்சினுக்கும் சென்னைக்குமாக ஃபிளைட்டில் பறந்து பறந்து றெக்கையெல்லாம் சோம்பலாகிக் கிடக்கும் அமலா, தி.நகரில் பொருத்தமான விலையில் பொருத்தமான வீடு கிடைத்ததும் சட்டென்று யெஸ் சொல்லிவிட்டார்.

0 comments:

Post a Comment