• ஆறு படங்களுக்கு அட்வான்ஸ் சந்தானம் காட்டில் மழை



    இது சந்தானம் சீசன். பல் விளக்கக் கூட நேரமில்லாமல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவர்.


    காயிருக்கும்போதே கடிச்சுக்கோ, நோயிருக்கும்போதே இருமிக்கோ என்கிற டைப் அவர். அதன் விளைவாக தான் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு கூட வராமல் அந்த நேரத்தையும் வீணாக்காமல் நடிக்க போய்விடுகிறார். இந்த வருத்தத்தை முணுமுணுப்பிலேயே கழித்து விடுகிறார்கள் சம்பந்தப்பட்ட டைரக்டர்களும்.

    போகட்டும்... நாம் சொல்ல வருவது மேலுமொரு நல்ல செய்தி. சமீபத்தில் இவரை வீட்டுக்கு வரவழைத்த சூர்யா-கார்த்தி பிரதர்ஸ் தங்கள் இருவரின் படங்களுக்கும் சேர்த்து சுமார் ஆறு படங்களுக்கான அட்வான்சை ஒரே பேமெண்ட்டாக கையில் திணித்தார்களாம். மூச்சுவிடக் கூட நேரமில்லையே என்று சந்தானம் சிலுப்பினாலும், இருவரது அன்பின் கோரப் பிடியில் சிக்கி அந்த அட்வான்சை வாங்கிக் கொண்டாராம் சந்தானம்.

    இதில் பாதியை கவுண்டருக்கு வெட்றதுதான் நியாயம் பாஸு...

0 comments:

Post a Comment