• பெரிய நட்சத்திரங்களுடன் தயாராகிறது ‘அம்புலி இரண்டாம் பாகம்’



    அம்புலி 3டி திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து அமோகமான மக்கள் வரவேற்பை பெற்று வெற்றிநடை போடுகிறது. சிறுவயதில் நாம் கேட்ட பாட்டி கதைகளை பிரம்மாண்ட காட்சிகள் மூலம் 3டியில் மிரட்டும் விதமாய் பிரமிக்கவைப்பதாக இருந்தது.


    இதைத்தொடர்ந்து இப்படத்தை தயாரித்த கே.டி.வி.ஆர். கிரியேட்டிவ் ரீல்ஸ் நிறுவனம் அம்புலி இரண்டாம் பாகத்தை தொடங்கப் போகிறது. இரட்டை இயக்குநர்களான ஹரி ஷங்கர், ஹரீஸ் நாராயணன் இருவரும் சேர்ந்து இயக்கவிருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சதீஷ்.ஜி என மீண்டும் இதே குழு களமிறங்குகிறது.

    இப்படத்தை 3டியிலும், மேலும் ஒரு அதிநவீன தொழில்நுட்பத்திலும் வெளியிடப்போவதைப் பற்றி படக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றனர். முதல் பாகத்தில் தொழில்நுட்ப யுக்திகளை மட்டும் நம்பி புதுமுகங்களை வைத்து 3டி திரில் அனுபவத்தை வழங்கிய அம்புலி இயக்குனர்கள், இரண்டாம் பாகத்தில் தொழில்நுட்பம் மட்டுமின்றி பெரிய நட்சத்திரங்களுடனும் இணைந்து கலக்கவுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் சூடான கதை விவாதம் தொடங்கியுள்ளது. முதல் பாகம் 1978 -ஆம் ஆண்டு கிராமத்தில் நடந்த கதை. இரண்டாம் பாகம் 1990-களில் நகரத்தில் நடக்கவுள்ளது. இதில் பங்குபெறவிருக்கும் பெரிய நட்சத்திரம் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என இயக்குனர்கள் ஹரி ஷங்கரும், ஹரீஷ் நாராயணும் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment