ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.
சமீபத்தில் நடந்த பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக துப்பாக்கியின் முழுப் படப்பிடிப்பையும் நடத்த முடியாமல் பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் முருகதாஸ் குறும்படத்தை இயக்குவதில் கவனம் செலுத்தினார். தற்போது மீண்டும் படபிடிப்பை நடத்த இயக்குநர் மற்றும் படக்குழுவினர் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
பெப்சி பிரச்சினை தமிழகம், ஆந்திரா போன்ற பகுதிகளில் நடந்து வருகிறது. இதனால் முழுப் படப்பிடிப்பையும் மும்பையிலேயே நடத்தி முடித்து விட திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர். படத்தின் கதையில் விஜய் மும்பையில் போலீஸ் அதிகாரியாக வருகிறார். எனவே படத்தை மும்பையில் நடத்த போவதாக கூறுகிறார். மேலும் இப்பகுதிகளில் பெப்சி தொழிலாளர் பிரச்சினை வராது என நம்புகின்றனர் படக்குழுவினர். ஆனால் மும்பையில் அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பில் பெப்சிக்காரர்கள் பிரச்சினை செய்தது குறிப்பிடத்தக்கது.
பெப்சி, தயாரிப்பாளர் தகராறு இன்னும் முடிவடையாத நிலையில், விஜயின் துப்பாக்கி ஷூட்டிங்கை நடத்துவது கோலிவுட்டில் முணுமுணுப்பைக் கிளப்பியுள்ளது. விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். காமெடி நடிகர் சத்யன் முக்கிய வேட்த்தில் நடிக்கிறார்.
0 comments: