• கடுமையான உழைப்பே வெற்றிக்கு வழி வகுக்கும்: காஜல் அகர்வால் பேட்டி


    சினிமாவில் கடுமையாக உழைத்தால் வெற்றியடையலாம் என்று நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

    திரையுலக முன்னணி நடிகை காஜல் அகர்வால், மாற்றான், துப்பாக்கி போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.


    கடந்த சில வருடங்களாக சினிமாவில் வெற்றிபெற்றதற்கு தான் கடுமையாக உழைத்துள்ளதாக கூறியுள்ளார்.

    இது குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், எனக்கு போராட்ட குணம் அதிகம். பள்ளியில் படிக்கும் போது ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட பொறுத்துக் கொள்ளமாட்டேன்.

    ஒரு வேலையில் தோற்றால் அந்த வேலையில் வெற்றியடையும் வரை தூங்க மாட்டேன். சினிமாவிலும் அப்படித்தான் வெற்றி பெறுவதற்காக தினமும் போராடுகிறேன்.

    தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து நிவர்த்தி செய்வேன். சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்தால் முன்னுக்கு வரலாம்.

    நல்ல கதாப்பாத்திரங்களை தெரிவு செய்து நடிக்கிறேன். கதாப்பாத்திரத்தை சிறப்பாக்க முழு ஈடுபாட்டுடன் முழு உழைப்பையும் செலுத்துகிறேன் என்று நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment