கார்த்தி நடித்துள்ள சகுனி திரைப்படம் ஏப்ரல் 14ம் திகதி, சித்திரை திருவிழா விருந்தாக ரசிகர்களுக்காக திரையிடப்பட உள்ளது.
கொலிவுட்டில் நாயகன் கார்த்தி முதன்முறையாக அரசியல்வாதியாக சகுனி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கார்த்திக்கு ஜோடியாக ப்ரணிதா இணைகிறார். இவர்களுடன் ராதிகா, நாசர், மும்தாஜ் மற்றும் சந்தானம் பிரதான நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.
கிராமத்திலிருந்து சென்னை வரும் கதாநாயகன் கார்த்தி, சென்னையில் சந்திக்கும் சவால்களை நகைச்சுவையாக இயக்குனர் சங்கர் தயாள் கூறியுள்ளார்.
ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ட்ரீம் வாரியார் பட நிறுவனம் தயாரித்துள்ளது.
சகுனி திரைப்படத்தின் பாடல்களை வருகிற மார்ச் மாதத்திலும், திரைப்படத்தை ஏப்ரல் 14ம் திகதியிலும் வெளியிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர்.

0 comments: