ஜீவாவிற்கு ஜோடியாக நாயகி திரிஷா, என்னுடைய படத்தில் நடிப்பார் என்று இயக்குனர் அகமது தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் அகமது இயக்கத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா புதுப்படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார்.
திடீரென்று இப்படத்திலிருந்து திரிஷாவை நீக்கிவிட்டதாக செய்திகள் வெளியானது. வயதாகி விட்டதால் ஜீவாவுக்கு பொருத்தமான ஜோடியாக இல்லை என்று நீக்கியதாக கூறப்பட்டது.
இதற்கு இயக்குனர் அகமது மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஜீவாவிற்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை அணுகி கதை சொன்ன போது, அவருக்கு கதை பிடித்தது.
ஆனால் திரிஷா, வேறு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். இதனால் எதிர்வருகிற மே மாதம் தான் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம் என்று கூறியுள்ளார்.
மேலும் திரிஷாவின் தாய் உஷா கிருஷ்ணனும் ஜீவாவிற்கு ஜோடியாக திரிஷா நடிப்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
வெளியூர் படப்பிடிப்பை முடித்து விட்டு திரிஷா, சென்னை திரும்பியதும் படத்துக்காக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என்றார்.
முன்செல்ல

0 comments: