• கார்த்தியும் இல்லை.. சூர்யாவும் இல்லை.. ஜீவா



    அருள்நிதி நடிப்பில் வெளிவந்த படம் 'மெளனகுரு'. எந்த ஒரு எதிர்ப்பாப்பும் இல்லாமல் வந்து  வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சாந்தகுமார்.


    அடுத்து சாந்தகுமார் இயக்கத்தில் யார் நடிக்க இருக்கிறார்கள், யார் தயாரிப்பாளர் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்நிலையில் சாந்தகுமார் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்க இருக்கிறார் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் யார் நடிக்க இருக்கிறார் என்பது உறுதி செய்யப்படவில்லை.

    ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் என்றாலே அதில சூர்யா அல்லது கார்த்தி தான் நாயகனாக நடிப்பார்கள். 'சில்லுனு ஒரு காதல்', 'சிங்கம்','சிறுத்தை', 'நான் மகான் அல்ல' உள்ளிட்ட படங்கள் அதற்கு சான்று.

    ஆகவே சாந்தகுமார் இயக்க இருக்கும் படத்தில் கார்த்தி நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அந்த படத்தில் நடிக்க இருப்பது ஜீவா என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment