• காதலில் சொதப்பியதால் சந்தோஷம் !



    'முப்பொழுதும் உன் கற்பனைகள்' மற்றும் 'காதலில் சொதப்புவது எப்படி' ஆகிய 2 படங்களுக்கும் ஒரே நாளில் வெளியானது. இரண்டிலுமே நாயகியாக நடித்தார் அமலாபால்.


    'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தில் சாருலதா என்ற சாஃப்ட்வேர் எஞ்சினியராகவும், 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் பார்வதி என்ற கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்து இருக்கிறார். 2012ம் ஆண்டு தொடக்கத்தில் அவர் நடித்து வெளியான 'வேட்டை' படமும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

    இரண்டு படங்களிலுமே அமலாவின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

    காதலில் சொதப்புவது எப்படி படத்தின் தெலுங்கு பதிப்பான LOVE FAILURE படம் அங்கு பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதற்கு பலனாக விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா நடிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அமலாபால்.

    இந்த வருடத்தில் தான் நடித்து வந்த படங்களின் வரவேற்பு, பெரும் நாயகர்கள் நடிக்க இருக்கும் படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பது என 2012 அமலா வருடமாக அமைந்து இருக்கிறது.

0 comments:

Post a Comment