• பிரபுசாலமன் இயக்கத்தில் ஆர்யா !



    லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தற்போதுவழக்கு எண் 18/9 ', 'கும்கி' ஆகிய படங்களை தயாரித்து வருகிறது. இவ்விரண்டு படங்களையும் யுடிவி நிறுவனம் வெளியிட இருக்கிறது.



    மேலும், விஷால் நடிக்கும் அடுத்த படத்தினையும், 'எங்கேயும் எப்போதும்' இயக்குனர் சரவணன் இயக்க இருக்கும் அடுத்த படத்தினையும் தயாரிக்க இருக்கிறது.


    சரவணன் இயக்க இருக்கும் படத்தின் நாயகனாக ஆர்யா நடிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படத்தில் இருந்து ஆர்யா விலகிவிட்டார்.


    ஆர்யா இப்படத்தில் இருந்து விலகி இருந்தாலும், திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தினை இயக்க இருக்கிறார் பிரபு சாலமன்.


    ஆர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'இரண்டாம் உலகம்' படத்தில் பிஸியாக இருக்கிறார். பிரபு சாலமன் 'கும்கி' படத்தில் மும்முரமாக பணியாற்றி வருகிறார்.


    இவ்விருவரும் தங்களது படபணிகளை முடித்தவுடன் இணைகிறார்கள். வேறு யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

0 comments:

Post a Comment