• சமீராவை வர்ணித்த அமெரிக்க தொகுப்பாளர்

    நடிகை சமீரா ரெட்டியை, அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஓப்ரா வின்ப்ரே வர்ணித்துள்ளார்.


    அமெரிக்க நிகழ்ச்சி தொகுப்பாளரான ஓப்ரா வின்ப்ரேவின் தீவிர ரசிகையாக இருப்பவர் நடிகை சமீரா ரெட்டி.

    சமீபத்தில் இந்தியா வந்த ஓப்ராவை சமீரா ரெட்டி நேரில் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு குறித்து சமீரா கூறுகையில், சென்னையில் வேட்டை திரைப்படத்தின் புரமோஷன் பணிகளை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டிருந்தேன்.

    ஆனால் ஓப்ரா வின்ப்ரே வருவதை அறிந்ததும் எனது நிகழ்ச்சிகளைக் ஒத்தி வைத்துவிட்டேன். அவரை சந்தித்தபோது என்னிடம் மிக இயல்பாக பழகினார்.

    நான் உடுத்தியிருந்த புடவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனை அழகான உடை இது என்று அடிக்கடி கூறி, தொட்டுப் பார்த்து மகிழ்ந்தார்.

    அவருக்கும் அதே போன்ற புடவையை தர விரும்பினேன். ஆரம்பத்தில் அவர் மறுத்தார், பின்னர் அவரைச் சம்மதிக்க வைத்துவிட்டேன்.

    நான் மிகவும் அழகாக இருப்பதாக ஓப்ரா என்னை வர்ணித்தார். அப்போது என் வாழ்க்கையின் பயனை அடைந்தது போல மகிழ்ச்சியடைந்தேன் என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment