இயக்குனர் பாலாவின் “நான் கடவுள்” படத்தில் கதாநாயகியாக நடித்த பூஜாவை, தன் அடுத்த படமான 'எரியும் தணல்' படத்திற்காக நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
ஜே.ஜே, தம்பி, அட்டகாசம் போன்ற படங்களில் நடித்த பூஜா, அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது இயக்குனர் பாலா, ’நான் கடவுள்’ படத்தில் பூஜா பிச்சைக்காரி வேடத்தில் சிறப்பாக நடித்ததால், தனது அடுத்த படமான “எரியும் தணல்” படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பூஜாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதற்காக பூஜாவை வைத்து ஒரு சோதனை படப்பிடிப்பை நட்த்தியிருக்கிறார். இந்த படத்தில் நடிகை வேதிகாவும் நடிக்கவிருக்கிறார்.
தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படத்தின் கதாநாயகன் அதர்வா, ‘எரியும் தணல்’ படத்தின் கதாநாயகனாக நடிக்க உள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இந்த படம் ஒரு மலையாள நாவலை மையமாக கொண்டது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments: