• கல்லூரி மாணவர்களை கவர்ந்த ஆண்ட்ரியாவின் பாடல்!




    எந்த துறையில் எடுத்தாலும் வித்தியாசத்தை விரும்புகிறவர்கள் நடுவில், படங்களுக்கு டைட்டில் வைப்பதிலும் வித்தியாசத்தை கடைப்பிடிக்கிறார்கள். அந்த வகையில் வித்தியாச டைட்டிலுடன் வெளிவரவிருக்கும் படம் தான் 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்'.


    'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தில் ஆண்ட்ரியா ஒரு கலர்புல்லான பாடலை பாடியிருக்கிறார். இப்படத்தின் புதுமுக இசைய்மைப்பாளர் வேத ஷங்கர், ஆண்ட்ரியாவிடம் தன் பாடலின் சரணத்தை கேட்கவேண்டுமாறு கூறினார். இதற்கு ஒப்புக்கொண்ட ஆண்ரியா, இணையதள அஞ்சல்( ) வாயிலாக பாடலின் சரணத்தை கேட்டார். இந்த சரணம் பிடித்து போகவே ஆண்ட்ரியா பாடுவதாக இசையமைப்பாளரிடம் பதிலளித்தார்.

    'ஹே கிரேசி மின்னல்' எனத் தொடங்கும் அந்த பாடல் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக இசையமைப்பாளர் கூறியுள்ளார். மேலும் இந்த பாடலை 30 கல்லூரி மாணவர்களுக்காக போட்டு காட்டினார். அவர்கள் அனைவருக்குமே அந்த பாடல் மிகவும் பிடித்திருப்பதாக கூறினர். எனவே ஆண்ட்ரியா பாடிய இந்த பாடல் இளையதலைமுறைகள் ரசித்து கவரும் விதத்தில் அமையும் என எதிர்பர்க்கப்படுகிறது. படத்தை பாலாஜி தரணிதரண் இயக்குகிறார்.

0 comments:

Post a Comment