ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தில் புதுமுக கதாநாயகர்களாக வெங்கடேஷ், அக்ஷரா அறிமுகமாகிறார்கள். இவர்கள் நடித்த முத்தக்காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.
சிட்டி லைட்ஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்தில் 71 புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். படத்தில் முத்தக்காட்சி தேவைப்படுவதால் ஹீரோ வெங்கடேஷ், ஹீரோயின் அக்ஷரா உதட்டுடன் உதடு சேர்த்து முத்தங்களை பரிமாறிக்கொண்டனர். இக்காட்சி படமாக்கப்படும்போது அக்ஷரா முத்தம் கொடுக்க முதலில் மறுத்தார். பின்னர் வெங்கடேஷ் முத்தம் கொடுக்க ஆரம்பித்த்தும், உணர்ச்சிவசப்பட்டு உதட்டை கடித்துவிடுவதுபோல் நடித்து காட்சியை முடித்தார்.
படத்திற்கு கதை, வசனம், திரைக்கதை அனைத்தையும் இயக்குனர் ஷண்முகராஜ் எழுதியிருக்கிறார். தாஜ்னூர் இசையமைத்து வருகிறார். 3 தேசிய விருகளை பெற்ற ”தென்மேற்கு பருவக் காற்று’ மற்றும் ‘வர்ணம்’ ஆகிய படங்களை வெளியிட்ட மைக்கல் ராயப்பன் வெளியிடுகிறார்.
0 comments: