டிட்டு புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள புதிய 3டி படம் “அதிசய உலகம் 3டி”. இப்படத்தில் லிவிங்ஸ்டன், ஜார்ஜ், ஆனந்த கண்ணன், லதாராவ், செல்வி ஸ்ரீலட்சுமி, மாஸ்டர் பிரதீப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் கதையானது விஞ்ஞானியான லிவிங்ஸ்டன் ஒரு புதுமையான கடிகாரத்தை உருவாக்குகிறார். அந்த கடிகாரத்தில் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் அனைத்தையும் பார்க்க முடியும். இந்த கடிகாரத்தை ஒரு சிறுவனும், சிறுமியும் அதை தவறாக கையாண்டதால், டைனோசர் காலத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு என்ன நடந்தது..? எனபதை பற்றி கதை எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்காக 15 விதமான டைனோசர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 90 நிமிடங்கள் ஓடும் இப்படத்தை இயக்கி, கதை, திரைக்கதை, இசை, எடிட்டிங், கிராபிக்ஸ் போன்ற பொறுப்புக்களை ஏற்றிருப்பவர் சக்திஸ்கார்ட். அம்புலி 3டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சதீஷ். ஜி இதற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படம் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக, கோடை விருந்தாக வெளிவரவிருக்கிறது.
0 comments: