• ஆர்யாவின் புது வீட்டில் குத்துவிளக்கேற்றினார் நயன்தாரா!


    நடிகர் ஆர்யாவின் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார் நடிகை நயன்தாரா.

    ஆர்யாவிற்கு சென்னை அண்ணாநகரில் ஏற்கனவே சொந்தமாக வீடு இருக்கிறது. அங்கு தனது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார் ஆர்யா. தற்போது ஆர்யா சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், 2 ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார்.

    இந்த வீட்டின் புதுமனை புகுவிழா ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடத்தினார். நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட இவ்விழாவில், நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார்.

    பிரபுதேவாவை பிரிந்த பிறகு நயன்தாரா, சென்னை வருவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்குவதற்காக சென்னை வந்தார்.

    நடிகர் விஷால், பட அதிபரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ஆர்யா விருந்து கொடுத்தார்.

0 comments:

Post a Comment