சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கும் பில்லா 2 படத்தினை ரிலீஸ் செய்ய படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ள இப்படத்தினை ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய போவதாக தகவல் வெளியாயின. இதன் பிறகு அஜித் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மே 2-வது வாரத்தில் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் பாடல்கள் வரும் ஏப்ரல் 25-ல் வெளியாகும் எனத் தெரிகிறது. அஜித்துக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

0 comments: