”ஒய் திஸ் கொல வெறிடி” பாடல் மூலம் பிரபலமான தனுஷ், பாலிவுட்டில் “ராஞ்ஜா” என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தமிழ் மற்றும் இந்தி மொழியில் தயாராகவுள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். பரத்பாலா இயக்கும் இப்படத்திற்கு ”19 ஸ்டெப்ஸ்” என்று பெயரிட்டுள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
கேரளாவில் பிரசித்திபெற்ற மார்ஷல் ஆர்ட்ஸ் சண்டை கலைகள் மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை. இந்த படத்தில்தான் தற்போது தனுஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதை தொடர்ந்து இந்தியில் அஜய் தேவ்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது இந்தியிலும் தனுஷே நடிப்பார் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தனுஷ் ஜோடியாக அசின் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
0 comments: