• நாளை தனது காதலரை மணக்கிறார் ரீமாசென்!



    நீண்ட நாட்களாக காதலித்து வந்த நட்சத்திர ஜோடிகளான ரீமா சென்னுக்கும்-ஷிவ்கரன் சிங்கிற்கும் நாளை டில்லியில் திருமணம் நடைபெற இருக்கின்றன.


    "மின்னலே" படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரீமா சென். இவர் டில்லியை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ்கரன் சிங்கை, கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தார். இதையடுத்து இவர்களிருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்படி இவர்களின் திருமணம் நாளை (மார்ச் 11 ஆம் தேதி) டில்லியில் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் இருவீட்டாரது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    ரீமாசென் "செல்லமே", "தூள்", "கிரி", "ஆயிரத்தில் ஒருவன்" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிட்த்தக்கது.

0 comments:

Post a Comment