• சினிமா தேசிய விருதுகள் - 2011 அறிவிப்பு...!!!



    இந்திய திரைப்படத் துறைக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான 59வது தேசிய விருதுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில் தமிழில் வாகை சூட வா படத்திற்கு சிறந்த தமிழ் திரைபடத்திற்கான விருதும், ஆரண்யகாண்டம் படத்திற்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருதும், சிறந்த துணை நடிகருக்கான விருது அழகர்சாமியின் குதிரை படத்தில் நடித்த அப்புக்குட்டிக்கும் கிடைத்திருக்கிறது.

    மேலும் தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் கி‌டைத்திருக்கிறது. சிறந்த நடிகருக்கான விருதை கிரீஸ் குல்கர்னிக்கு கி‌டைத்திருக்கிறது.

    ஷாருக் கான், கரினா கபூர் நடித்த ரா.ஒன் படத்திற்கு சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ்க்கான விருதும் கிடைத்திருக்கிறது.

    தேசிய விருதுகள் :

    சிறந்த தமிழ் திரைப்படம் - வாகை சூட வா (தமிழ்)

    சிறந்த துணை நடிகர் - அப்புக்குட்டி (தமிழ் - அழகர்சாமியின் குதிரை)

    சிறந்த பொழுது‌போக்கு திரைப்படம் - அழகர்சாமியின் குதிரை (தமிழ்)

    சிறந்த புதுமுக இயக்குநர் - ஆரண்ய காண்டம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா.

    சிறந்த படத்தொகுப்பு - ஆரண்யகாண்டம் (தமிழ்)

    சிறந்த நடிகர் - கிரீஸ் குல்கர்னி

    சிறந்த நடிகை - வித்யாபாலன் (தி டர்ட்டி பிக்சர்ஸ்)

    சிறந்த படம் - ஐ யாம்

    சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் - ரா ஒன்

0 comments:

Post a Comment